பெங்காலி மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள சன்டிவியின் முக்கிய சீரியல்

162

சமீபகாலமாக தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் மக்கள் அதிகம் விரும்பிப்பார்க்கும் சிறந்த சீரியல்களைத் தொகுத்து வழங்குவதில் சன்டிவி விஜய்டிவி ஷீ தமிழ் என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. அத்தோடு சீரியல்களுக்கே ஏராளமான ரசிகர்களும் காணப்படுகின்றார்கள்.

மேலும் கொரோனா லாக்டவுன் காரணமாக சில சீரியல்கள் இடை நிறுத்தப்பட்டது. அத்தோடு லாக் டவுன் முடிந்ததில் இருந்து நிறைய புத்தம் புதிய சீரியல்களும் ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் ஆரம்பமாகின.

அவ்வாறு சன் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் சுந்தரி. கருப்பு நிற பெண்ணின் வாழ்க்கையை சுற்றி கதை நகர்கிறது.தற்போது தான் சீரியல் மக்களிடம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது எனலாம்.

மேலும் தற்பொழுது தான் சீரியல் குறித்து ஒரு சூப்பர் நியூஸ் கிடைத்துள்ளது.அதாவது இந்த சுந்தரி சீரியல் விரைவில் பெங்காலி மொழியில் ரீமேக் ஆக உள்ளதாம். சீரியலும் சன் பங்காளா தொலைக்காட்சியிலேயே வரப்போகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சமூக ஊடகங்களில்: