மாலையும் கழுத்துமாக, தாலியோடு புகைப்படம் வெளியிட்ட சன்டிவி சீரியல் நடிகை- அட இவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா?

329

தமிழ் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகைகளைப் போல சின்னத்திரையில் நடித்து வரும் கதாநாயகிகளுக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அந்த வகையில் சன்டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபல்யமானவர் தான் வித்யா பிரதீப். அத்தோடு இவருக்கென்று ஏராளமான ரசிகர்களும் காணப்படுகின்றனர்.

மேலும் பல சின்னத்திரை பிரபலங்கள் பலர் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர். அவர்களில் சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் வரிசையில் தற்பொழுது வித்யா பிரதீப் அவர்களும் இணைந்துள்ளார் எனலாம் .

அதாவது கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள இவர் ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் ஆர்வம் காட் வருகின்றார். இதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான “சைவம்” படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார்.

அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது மாலையும் கழுத்துமாக, தாலியோடு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆனால் இது போட்டோ ஷூட்டுக்காக எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.