‘மாஸ்டர் செஃப்’ சமையல் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்ட சன்டிவி

584

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது சன் தொலைக்காட்சியாகும்.இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டானவை என்பதும் தெரிந்ததே. இந்த வகையில் இதில் பல புத்தம் புதிய நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டு வருவதையும் காணலாம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் தற்பொழுது தான் நடிக்கும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அவற்றில் நடித்து வருகின்றார்.

அத்தோடு பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் வில்லனானவும் , கேமியோ ரோலியும் நடித்து வருகிறார்.அதேசமயம் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி சினிமாக்களிலும் இவர் நடித்து வருகிறார். தற்போது இவர் ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்பதும் முக்கியமாகும்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை சன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சி ஆகஸ் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக சன் தொலைக்காட்சி அறிவித்துள்ளதும் முக்கியமாகும்.