• Apr 25 2024

35 வயதிலும் இப்படி ஓர் அழகா... வெளியானது சமந்தாவின் சீக்கிரட் ரிப்ஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் கலக்கி வருபவர் நடிகை சமந்தா. விஜய் , சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து நல்ல ஹிட் படங்களை சினிமாத்துறைக்கு கொடுத்துள்ளார்.

கடந்த 28ஆம் திகதி நடிகை சமந்தாவின் பிறந்த நாளன்று காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, போன்ற பல பிரபலங்கள் இப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அவரது புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகிவருகின்றது. அதில் பலரது கேள்வி 35 வயதிலும் சமந்தா எவ்வாறு அழகாக உள்ளார் என்பதே .

அதாவது இவரின் டெய்லி ரோட்டின் குறித்த தகவல் கசிந்துள்ளது.சினிமாத்துறையில் இருப்பவர்கள் பொதுவாக ஷூட்டிங்கிற்காக பல இடங்கள் செல்ல வேண்டியிருக்கும்.அப்படி செல்லுகையில் அலைச்சல் மற்றும் இடம் மாற்றம் காரணமாக அவர்களின் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்.அந்த வகையில் என்றும் பலப்பல சர்மத்துடன் இருக்கும் நடிகை சமந்தா தனது முகத்தை அழகாக வைத்துக்கொள்ள என்ன செய்கிறார் தெரியுமா .

சில மாதங்களுக்கு முன்பு தனது அழகிய சர்மத்திற்கான ரகசியம் பற்றி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.அது என்னவென்றால்,ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர் வைத்து தலையில் டவலை கட்டிக்கொண்டு நீராவி பிடிப்பது தான் என்று கூறியுள்ளார். நடிகை சமந்தா ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கு தினமும் காலையில் ஆப்பிள் சிடர் வினிகரை முகத்திற்கு பயன்படுத்துகிறார்.ஆப்பிள் சிடர் வினிகரில் எல்லா வினிகர்களையும் போலவே வைட்டமின்கள், கனிம உப்புகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது.எனவே சருமத்தை ஆரோயக்கியமாக வைத்திருக்க ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது.


அதேபோல் இரவில் நன்று தூங்கி எழுந்தால் காலையில் கண்கள் வீங்கியது போல தோற்றமளிக்கும்.அதை puffy eyes என்று கூறுவார்கள்.அதை தவிர்க்க Gel போன்றவற்றை பயன்படுத்துகிறார் சமந்தா.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று ஒரு பழமொழி இருக்கிறது.அது உள்ளம் அழகாக இருப்பதை குறிப்பிட்டாலும், அது உடலுக்கும் பொருந்தும்.எனவே உடலுக்கு தினமும் தேவையான காய்கறிகள், பழ வகைகளை சமந்தா தினமும் எடுத்துக்கொள்கிறார்.அத்துடன் அவரின் ஹாப்பி மைன்டும் சர்மம் பலப்பலக்க முக்கிய காரணியாக திகழ்கிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement