• Apr 24 2024

சமந்தாவின் கதாநாயகனான நாக சௌர்யாவிற்கு திருமணம் ...பொண்ணு இவங்க தானாம்..குடும்பத்தார் வெளியிட்ட திருமண தேதி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் நாக சௌர்யா .இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். நாக சௌர்யா நடிப்பில் கடிசியாக வெளியான கிருஷ்ணா விருந்தா விஹாரி படத்தின் வெற்றியில் மூழ்கி இருக்கும் நிலையில், தனிப்பட்ட வாழ்கை குறித்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 தனது நீண்ட நாள் காதலியான பெங்களூரைச் சேர்ந்த உள்துறை வடிவமைப்பாளர் அனுஷா ஷெட்டியை தான் அவர் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.


அத்தோடு  காதலை இரு வீட்டாரின் சம்மதத்துடன் தெரிவித்து குடும்பத்தினர், திருமண விழா குறித்த அழைப்பிதழை வெளியிட்டு இருக்கிறது.  நவம்பர் 19 ஆம் தேதி மெஹந்தி தொடங்கும் அதே வேளையில், திருமணம் நவம்பர் 20 ஆம் தேதி காலை 11.25 மணிக்கு நடைபெறும் என கூறப்படுகின்றது.



மேலும் இந்த திருமணம் நண்பர்கள மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில், பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அத்தோடு பெங்களூரில் உள்ள JW மேரியட் ஹோட்டலில் திருமணத்திற்கு முந்தைய மற்றும் திருமண விழாக்கள் நடைபெறுகின்றன.


சமந்தாவுடன் நாக சௌர்யா நடித்த ஓ பேபி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. எனினும் இதனை தொடர்ந்து, சில வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார் நடிகர் நாக ஷௌர்யா. இதற்கிடையில், இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. நடிகர் சமீபத்தில் தனது 24 வது படத்தில் கையெழுத்திட்டார், இது சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement