• Apr 20 2024

சமந்தாவின் சொத்துமதிப்பு இத்தனை கோடியா... பெறுமதியைக் கேட்டு வாயடைத்துப் போன ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மளமளவென வளர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் தான் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். இவர் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் தான் அதிகமாக நடித்து வருகின்றார். 


அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'யசோதா' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மியும் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யசோதா படத்தை தொடர்ந்து குஷி, சகுந்தலம் ஆகிய படங்களை சமந்தா தன்னுடைய கைவசம் வைத்துள்ளார்.


அண்மையில் சமந்தாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போக தற்போது அதற்கான மருத்துவ சிகிச்சையில் தீவிரமாக இருந்து வருகிறார். ஒரு சில நாட்களுக்கு முன்பு கூட ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு படத்திற்கு டப்பிங் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் சமந்தா. இதனைத் தொடர்ந்து விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வேண்டி வருகிறார்கள்.


இந்நிலையில் 2010-ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான சமந்தா கடந்த 12 ஆண்டுகளில் சேர்த்து வைத்துள்ள சொத்து குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தவகையில் சமந்தா இதுவரை ரூ. 100 கோடி வரை தன்னுடைய உழைப்பில் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement