தமது விவாகரத்து குறித்து முதன் முதலாக பேசிய சமந்தாவின் கணவர்!

4116

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் கலக்கி வரும் நடிகை சமந்தா. ரசிகர்கள் மத்தியில் அறிமுகமே தேவை இல்லாதவர்.

சில மாதங்களுக்கு முன்பு தன்னுடன் படங்களில் நடித்த தெலுங்கு சினிமா நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து ஹைதராபாத்திலேயே செட்டில் ஆனார்.

இந்நிலையில் சமந்தா-நாக சைத்தன்யா இருவரும் விவாகரத்து செய்ய உள்ளார்கள் என சில நாட்களாக ஒரு செய்தி உலா வருகிறது. இந்த செய்தி குறித்து முதன்முறையாக நாக சைத்தன்யா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது “விவாகரத்து செய்தி எனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது. இன்றைய கால கட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி வந்து விடுகிறது.

இன்று பரபரப்பாக ஒரு செய்தி இருந்தால், நாளை இன்னொரு செய்தி பரபரப்பாக உள்ளது, அதில் முந்தைய நாள் செய்திகள் மறந்து விடுகின்றன. எனக்குள் இந்த புரிதல் வந்தவுடன் நானும் இது குறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன்”. என்று கூறியுள்ளார்.