புஷ்பா படத்தில் சமந்தவின் நடனம் ஆரம்பமாகிவிட்டதாம்..எங்கு தெரியுமா..!

132

தென்னிந்திய சினிமாவில் தமது சிறந்த நடிப்பினால் தமக்கென்று ஓர் இடத்தைப்பிடித்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முக்கிய நடிகையாக வலம் வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதியடன் இணைந்து காத்து வாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இவ்வாறு இருக்கையில் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. பெரியளவில் எடுக்கப்படும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது என்று தான் கூறவேண்டும்.நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஒரே ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு குத்தாட்டம் போட தயாராகியுள்ளார்.

எனினும் இப்பாடலின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் ஆரம்பமாகி உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், கணேஷ் ஆச்சார்யா நடன இயக்கத்தில் பாடல் படமாகி வருகிறதாம்.

அத்தோடு இரண்டு பாகங்களாக தயாராகி வரும் இப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது.