• Apr 19 2024

மீண்டும் ஒரு காவியக் காதலா..? புத்தாண்டு பிறந்ததும் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணிக் கதாநாயகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னரும், அனைத்துத் தடைகளையும் தாண்டி சினிமாவில் படு பிசியாக நடித்து வந்தார்.


இதனால் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகில் இருந்து பட வாய்ப்புகளும் அவருக்கு குவிந்து வந்தன. இவ்வாறு பல படங்களிலும் ஓய்வில்லாமல் நடித்து வந்த சமந்தாவுக்கு கடந்த அக்டோபர் மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது அவருக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 


இந்த நோய்க்காக ஒரு மாதத்திற்கு மேல் சிகிச்சை பெற்று அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்த சமந்தா, கடந்த நவம்பர் மாதம் தனது 'யசோதா' படத்தின் புரமோஷனுக்காக சில பேட்டிகளையும் கொடுத்தார். அப்போது அந்த நோய் பாதிப்பினால் தான் எதிர்கொண்ட கஷ்டங்கள் குறித்தும் மனம் திறந்து கண்ணீர் மல்க பேசினார்.


இதனைத் தொடர்ந்து யசோதா படமானது கடந்த நவம்பர் 11-ஆம் தேதி வெளியாகி வெற்றியடைந்தது. இந்த வெற்றியைக் கூட கோலாகலமாக கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சமந்தா, உடல்நிலை மோசமானதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தென் கொரியாவுக்கு சென்று அங்கு சிகிச்சை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.


மேலும் இந்த நோய் பாதிப்பின் காரணமாக சமந்தா நடிக்க கமிட் ஆகி இருந்த ஒரு சில பட வாய்ப்புகளும் அவரைவிட்டு நழுவிச் சென்றன. இவ்வாறு 2022-ஆம் ஆண்டின் கடைசி சில மாதங்கள் சமந்தாவுக்கும் மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்த நிலையில், தற்போது புத்தாண்டு பிறந்துள்ள வேளையில் குட் நியூஸ் ஒன்றை ரசிகர்களுக்கு சொல்லி உள்ளார் சமந்தா.

அதாவது அவர் நடிப்பில் உருவாகி உள்ள சாகுந்தலம் என்கிற திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கப்பட்டு உள்ளது. காவிய காதல் படமான இப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். அத்தோடு இப்படத்தை குணசேகர் இயக்கி உள்ளார். 


அந்தவகையில் இப்படமானது வருகிற பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தாவுக்கு இந்தப்படமும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement