• Apr 19 2024

மீண்டும் விஜயுடன் ஜோடி சேரும் சமந்தா - எந்த படத்தில் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

2010 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் சமந்தா.

அதை தொடர்ந்து பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி,நான் ஈ,நீ தானே என் பொன்வசந்தம் என் பல படங்களில் நடித்துள்ளார் .இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு , ஹிந்தி என பல மொழிகளிலும் படம் நடித்துள்ளார். தளபதி விஜயுடன் தெறி, மெர்சல், கத்தி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி கொண்டார் .இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .

சமீபத்தில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் பீஸ்ட் வெளியாகி இருந்த போதிலும் எதிர் பார்த்தளவிற்கு வெற்றியை பெறாத நிலையிலும் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 என்ற படத்தை வம்சி இயக்கிக்கொண்டு இருக்கிறார்.இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் படமாக இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மெர்சல் ,கத்தி ,தெறி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த சமந்தாவே நான்காவது முறையாக இந்த படத்திலும் விஜய்க்கு யோகியாக நடிக்க உள்ளார் .

சமந்தா நடிப்பில் இறுதியாக வெளியாகிய காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது . அதனை தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் குஷி என்ற படத்தில் நடித்து கொண்டது இருக்கின்றார் .
இந்த படத்தின் முதல் கட்டிட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் வருகின்ற டிசம்பர் மதம் 23ஆம் திகதி தமிழ், தெலுங்கு,கன்னடம் ,மலையாளம் ஆகிய மொழிகளில் படம் ரிலீஸாகா உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் முடிவடைந்த கையேடு சமந்தா தளபதியின் 67- என்ற படத்தில் நடிக்க தயாராக உள்ளார்.

அனிருத்தின் இசையில் படத்தை இயக்கி கொண்டு இருந்த லோகேஷ் கனகராஜ் விஜயின் 67 என்ற படத்தை யுவன்சங்க ராஜாவின் இசையில் இயக்கவுள்ளார். மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் விஜயுடன் இணைவதை வைத்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கெத்தாக பேசி வருகின்றனர் .தாளபதியின் 67வது படம் ஹிட்டாக ஈர்க்கும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள் .

https://www.youtube.com/embed/LcXVkYfdg0E



பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Post Settings

Advertisement

Advertisement

Advertisement