• Apr 20 2024

சமந்தா நடிப்பில் வெளியாகிய யசோதா படத்தின் திரைவிமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இரட்டை இயக்குநர்களான ஹரி மற்றும் ஹரீஷ் இணைந்து இயக்கி உள்ள திரைப்படம் தான் யசோதா.இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார் .மணிஷர்மாவின் இசையில் உருவான இப்படம் இன்றைய தினம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. எனவே அப்படத்தின் கதைக்களம் என்னவென்று பார்ப்போம்.

கதைக்களமாவது 

சாதாரண குடும்பத்தை சேர்ந்த சமந்தா தனது தங்கைக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால், வாடகைத்தாயாக மாறுகிறார். சமந்தாவை லேப் ஒன்ற ஒரு செட்டப்பில் அடைத்து வைக்க, அங்கே இவரை போல பல பெண்கள் வாடகைத்தாயாக உள்ளனர். வரலக்‌ஷ்மி சரத்குமார் நடத்தும் அந்த க்ளினிக்கில் சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் வாடகைத்தாயாக வரும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடும் சக்தியாக உருவெடுக்கும் சமந்தா அங்கிருத்து தப்பித்தாரா? மற்ற பெண்களை காப்பாற்றினாரா? என்பது தான் யசோதா படத்தின் கதை.


படத்தின் கிளாப்ஸ்

வாடகைத்தாயாக அப்பாவி பெண்ணாக நடிக்கும் காட்சிகள் அனைத்திலும் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார் சமந்தா.மேலும் ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து நடித்திருக்கிறார் என்னும் அளவுக்கு சூப்பராக நடித்திருக்கின்றார்.

மேலும் சர்கார் படத்தில் அரசியல் வில்லியாக நடித்து அசத்திய வரலக்‌ஷ்மி சரத்குமார் இந்த படத்தில் கார்ப்பரேட் வில்லியாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.சமந்தாவின் ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டலாக இருப்பதால் ரசிகர்களுக்கு ஹீரோ இல்லாத குறையே தெரியாமல் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. அந்த இடத்தில் நடக்கும் பிரச்சனைகளை சமந்தா எப்படி ஒவ்வொன்றாக கண்டு பிடிக்கிறார் என திரைக்கதை அமைத்த விதத்தில் இரட்டை இயக்குநர்களும் சிக்ஸர் அடித்துள்ளனர். 


படத்தின் மைனஸ்

மணிஷர்மாவின் பின்ன்ணி இசை படத்துக்கு பெரிய பலமாக இருந்தாலும், பாடல்கள் எல்லாமே டப்பிங் படத்தை பார்க்கும் உணர்வை தான் கொடுக்கிறது. மேலும், சில இடங்களில் வரும் VFX காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் படக்குழு மெனக்கெட்டு இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.இருந்தாலும் சமந்தாவின் நடிப்பிற்காக இப்படத்தை கண்டுகளிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement