• Mar 29 2024

சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா... அதுவும் இந்த நாட்டுக்கா.. பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மளமளவென வளர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் தான் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். இவர் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் தான் அதிகமாக நடித்து வருகின்றார். 


மேலும் சமந்தா நாக சைதன்யா உடனான விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் தான் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு இருக்கிறது. அதாவது அவருக்கு myositis என்ற அரிய வகை auto immune நோய் தான் வந்திருக்கிறது.


இதனைத் தொடர்ந்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் "நான் இன்னும் சாகவில்லை, இந்த கடினமான நோயில் இருந்து நிச்சயம் போராடி மீண்டு வருவேன்" எனத் தெரிவித்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாது அந்த நோய்க்காக ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார் என்று ஏற்கெனவே செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது சமந்தா மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தற்போது தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.


அந்தவகையில் அவர் தென்கொரிய நாட்டுக்கு தான் சிகிச்சைக்கு செல்கிறாராம். அத்தோடு ஏற்கனவே சமந்தா தான் கொரிய ஸ்கின்கேர் காஸ்மெடிக்ஸ் தான் பயன்படுத்தி வருவதாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சிகிச்சைக்காக கொரியா செல்லும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement