• Apr 01 2023

அந்த நேரத்தில் எனக்கு வேலை வாய்ப்பு கொடுத்தாரு சமந்தா.! சின்மயின் உருக்கமான பேச்சு

Jo / 4 weeks ago

Advertisement

Listen News!

பாடகி சின்மயி சமீபத்தில் நேர்காணல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை சமந்தா பற்றி பாராட்டியுள்ளார். பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் குற்றம் சாட்டிய பாடகி, 2018 ஆம் ஆண்டில் திரைப்படத் துறையில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார்.

அதாவது, #MeToo சர்ச்சையின் போது, சின்மயிக்கு டப்பிங் யூனியன் திரைத்துறையில் பணியாற்றுவதற்கு தடை விதித்தது. ஆனால், சின்மயி அந்த நேரத்தில் சமந்தாவுக்காக திரைப்படங்களில் டப்பிங் செய்து வந்தார். இந்நிலையில், சமந்தா பற்றி அந்த ஒரு நேர்காணலில் பேசுகையில், அந்த கடினமான காலங்களில் சமந்தா தான் தனக்கு வேலை கொடுத்தவர் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், சினிமா துறையில் பெண்களைச் சுற்றிக் கட்டப்பட்ட பல கண்ணாடிக் கூரைகளை சமந்தா உடைத்துள்ளார் என்றும், #MeToo சர்ச்சையின் போது நடிகை தனக்கு ஆதரவாக நின்றதாகவும் கூறினார்.

நடிகை சமந்தா பாடகி சின்மயிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த வகையில், மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டபோது சமந்தாவுக்கு ராகுல் ரவீந்திரன் மற்றும் சின்மயி ஆகியோர் தங்கள் ஆதரவை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement