கள்ளக்காதலா…. என கிசுகிசுக்கப்பட்ட நபருடன் வெளிநாட்டுக்கு பறந்த சமந்தா- அவரே வெளியிட்ட புகைப்படம்..!

49712

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே.மேலும் திருமணம் ஆகி 4 வருடங்களில் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

மேலும் இவர் கணவனைப் பிரிந்ததில் இருந்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சமந்தா தற்போது அவரின் தோழியுடன் இணைந்து ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார்.அந்த ஆன்மீக சுற்றுலாவில் இருந்து ஹைதராபாத் திரும்பிய சமந்தா மீண்டும் டூர் கிளம்பிவிட்டார்.

ஹைதராபாத் விமான நிலையத்தில் தன் மேக்கப் ஆர்டிஸ்ட் சாதனா சிங் மற்றும் ஸ்டைலிஸ்டான ப்ரீத்தம் ஜுகல்கருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு, வெளிநாட்டிற்கு செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சமந்தாவுடன் விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை ப்ரீத்தம் ஜுகல்கரும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார். அவர்கள் எந்த நாட்டிற்கு செல்கிறார்கள் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.

மேலும் முன்னதாக சமந்தாவுக்கும், ப்ரீத்தம் ஜுகல்கருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதும் விவாகரத்துக்கு ஒரு காரணம் என்று பேசப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என்று தெரிவித்தார் சமந்தா.

அந்த விவகாரம் குறித்து ப்ரீத்தம் கூறியதாவது,நான் சமந்தாவை ஜிஜி என்று அழைப்பேன். வட இந்தியாவில் ஜிஜி என்றால் அக்கா என்று அர்த்தம். எனக்கு சமந்தா அக்கா மாதிரி என்பது நாக சைதன்யாவுக்கு நன்கு தெரியும். அப்படி இருந்தும் அவர் அமைதியாக இருப்பது ஏன் என்று புரியவில்லை என்று குறிப்பிட்டார்.இதேவேளை பிரபல நடிகை ஒருவர் ப்ரீத்தம் ஜுகல் ஒரு ஓரின செயற்கையாளர் என்று குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.