• Apr 20 2024

சாய்பல்லவியின் கார்கி திரைப்படத்திற்கு கிடைத்த விசேட சலுகை- குவியும் பாராட்டுக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் ’கார்கி’. இந்தத் திரைப்படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி கைப்பற்றியது. இந்த படத்தினை சூர்யா ஜோதிகா தம்பதியர் தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வழங்கினர்.

பள்ளி ஆசிரியராக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் காளி வெங்கட், சரவணன், ஐஸ்வர்யா லெஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.இந்நிலையில் இந்த படத்தின் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனமான சோனி லிவ் கைப்பற்றி உள்ளது.

இன்று முதல் கார்கி திரைப்படம் சோனி லிவ் தளத்தில் ஒளிபரப்பாகும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, இந்தி மொழியில் வெளியாகி உள்ளது. இது முதன் முறையாக சாய்பல்லவியின் படம் பெங்காலியில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement