‘வருத்தங்கள் வரலாம் இந்த நிமிடம் நம்மிடம் தான் இருக்கின்றது”- வேற லெவல் ரியாக்சன் கொடுத்த நடிகை அமலாபால்

131

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் நடிகை அமலாபால். இவர் தமிழில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும் இப்படத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

மேலும் இவர் இயக்குனர் ஏ எல் விஜய்யைத் திருமணம் செய்து பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டவிவாகரத்துப் பெற்று மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த படம் ஆடை. அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் வெற்றி பெற்ற ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ தெலுங்கில் அமலாபால் நடிப்பில் ‘பிட்ட கதாலு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி , அங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து “வருத்தங்கள் வரலாம். வருத்தங்கள் போகலாம். இந்த நிமிடம் நம்மிடம் இருக்கிறது. அவ்வளவுதான். எனவே கடவுள்களின் பானத்தை நீங்களே ஊற்றி யாரும் பார்க்காதது போல் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். சிறப்பான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்“ என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் பின்னணியில் ஒலிக்கும் மியூசிக்கிற்கு அமலா பால் கொடுத்துள்ள ரியாக்சன் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அத்தோடு இவர் நடிப்பில் ‘அதோ அந்த பறவை போல’ படம் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.