• Apr 25 2024

தெலுங்கு ஊடகங்கள் கிளப்பிவிட்ட வதந்தி – சுருதி ஹாசன் தரமான கொடுத்த பதிலடி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக சுருதிஹாசன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். மேலும், இவர் 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருந்தார்

அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை. மேலும், ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே இவர் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து இருந்தார். பின் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் அறிவித்தார். தற்போது ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிக்காவை காதலிப்பதாக தெரிவித்தார்.

மேலும் இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு முதலே ஒன்றாக வசித்து வருகிறார்கள். ஆனால், தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றும் தான் திருமணம் செய்துகொள்ளப்போவது இல்லை என்றும் கூறி இருந்தார் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் பெஸ்ட்செல்லர் என்ற வலைத்தொடர் ஆன்லைனில் வெளிவந்து இருந்தது. இதில் மிதுன் சக்ரவர்த்தி, அர்ஜன் பாஜ்வா மற்றும் கவுகர் கான் உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள்.

இதனை தொடர்ந்து வால்டர் வீரய்யா மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி போன்ற படங்களில் சுருதிஹாசன் நடித்து இருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் சுருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.மேலும் அதில் சரியான செல்ஃபிகள் மற்றும் போஸ்ட்டுகள் நிறைந்த உலகில் போஸ்ட்டுக்கு வராதவை இதோ. மோசமான முடி நாள், காய்ச்சல் மற்றும் சைனஸ் பிரச்னையால் முகம் வீங்கிய நாள், மீதமுள்ளவை மாதவிடாய் க்ராம்ப் நாள். இவைகளையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

அத்தோடு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகை ஸ்ருதி ஹாசன், மனநலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவது மற்றும் அவற்றை சரி செய்வது எளிதான விவகாரம் அல்ல என தனது இன்ஸ்டகிராமில் தெரிவித்திருந்தார்.மேலும் இப்படியொரு நிலையில் , சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ‘வால்டர் வீரய்யா’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் ஸ்ருதி ஹாசன் கலந்துக் கொள்ளவில்லை. இதனால் ஸ்ருதி ஹாசன் மன நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் தான் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று பல தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

இப்படியொரு நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்ருதி ஹாசன் ‘சரி இதோ விஷயம், இது போன்ற தவறான தகவல்கள் மற்றும் அதிகப்படியான நாடகமாக்கல் அல்லது இதுபோன்ற விஷயங்களை வளைந்து கொடுக்கும் விதத்தில் கையாள்வது, மனநலம் பற்றி பேச மக்களை பயப்பட வைக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். அத்தோடு, வேறொருவரை மோசமாக்க முயற்சிக்கும்போது நீங்கள் ஒருபோதும் அழகாகத் தெரிவதில்லை’ என்றும் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement