ரூ. 7 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்..வைரலாகி வரும் தகவல்..!

7251

பிக்பாஸ் 5வது சீசன் கடந்த ஒக்டோர் ஆரம்பமாகி பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டே தான் இருக்கின்றது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து எதிர்பாராத விதமாக திடீரென வெளியேறினார் .அவரைத் தொடர்ந்து நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா என வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் இசைவாணி வெளியேறி இருந்தது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

பிரபல பாடகியான இசைவாணி, கானா ஸ்டைலில், எளிய நடையில் ஆழமான கருத்துக்களை எளிமையாக கொண்டுசென்று சேர்ப்பதில் கவனம் ஈர்க்கும் பாடல்களைப் பாடி பிரபலமானவர். பிக்பாஸ் போட்டியாளராக இணைந்த இசைவாணி பிக்பாஸ் வீட்டிலும் தொடக்கத்தில் இப்படியான பாடல்களை பாடி வந்தார் கலக்கி வந்தவரும் கூட.

இவ்வாறு இருக்கையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு, வாரத்தின் அடிப்படையில் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

அப்படி, கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இசைவாணிக்கு, ஒரு வாரத்திற்கு ரூ. 1 லட்சம் சம்பளமென்று பேசப்பட்டிருந்ததாக தெரிவிக்கின்றனர்.

எனினும் அதன் அடிப்படையில், 49 நாட்கள் வீட்டிற்குள் இருந்து வெளியேறிய இசைவாணி, ரூ. 7 லட்சம் சம்பளத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்று தெரியவருகிறது.