13 பேய்ப்படங்களைத் தனியாக அமர்ந்து பார்ப்பவர்களுக்கு ரூ.95,700 பரிசு- ஆச்சரியத்தில் ரசிகர்கள்

190

தென்னிந்திய சினிமாவில் மக்களால் அதிகம் பார்க்கப்படும் பொழுது போக்கு விடயமாக திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அத்தோடு சீரியல்கள் என்பன காணப்படுகின்றது. அந்த வகையில் காதல் திரைப்படங்கள், ஆக்ஷன் திரைப்படங்கள், பேய்த்திரைப்படங்கள், நகைச்சுவைத் திரைப்படங்கள் என மக்களைக் குஷிப்படுத்த பல திரைப்படங்கள் வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன.

மேலும் இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் பலவாறான திரைப்படங்கள் எடுக்கப்பட்டு ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன என்பது நாம் அறிந்த விடயம் தான். அந்த வகையில் பேய்ப் படங்களைத் தனியாக அமர்ந்து பார்ப்பவர்களுக்கு ரூ.95,700 பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பைனான்ஸ் பஸ் என்ற நிறுவனம் சுமார் 13 படங்களைத் தனியாக அமர்ந்து பார்ப்பவர்களுக்கு ரூ.95,700 பரிசு வழங்கப்படும் எனவும், இப்படங்களை பார்ப்பதன் மூலம் மனிதர்களின் ரத்த ஓட்டம், அவற்றின் இயக்கத்தைத் தெரிந்துகொண்டு, அது மனிதர்களுக்கு எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆராய்ச்சி செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலைக் கேட்ட ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.