• Apr 24 2024

கோல்டன் குளோப் விருதினைப் பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் ராஜமௌலி நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 போன்ற தரமான படங்களை இயக்கி வருகிறார். இப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு  வர்த்தக ரீதியிலும், விமர்சன அளவிலும் பிரமாண்ட வரவேற்பை பெற்றன. பாகுபலி 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ. 1800 கோடி அளவுக்கு வசூலித்தது. 

இதன் பின்னர்  ராஜமௌலி, ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இப்படத்தில் ராம் சரண்,ஜூனியர் என்டிஆர், அஜய் தேவன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ்,தெலுங்கு, ஹிந்தி,மலையாளம், கன்னடம் என பான் இந்திய திரைப்படமாக வெளியான இப்படம் வசூலை வாரிக்குவித்தது.


சுதந்திரத்துக்காகப் போராடிய இரண்டு நண்பர்களைப் பற்றிய கதை தான் ஆர்.ஆர்.ஆர். இதில், அல்லுரி சீதாராம ராஜு என்ற ரோலில் ராம்சரணும், கொமாரம் பீம் என்ற வேடத்தில் ஜூனியர் என்டிஆரும் நடித்திருந்தார்கள். இருவருமே சிறந்த நடிகர்களாக இருந்த போதும், ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவுக்கு இருவரின் நடிப்பும் உச்சுகொட்டவைத்தது.

இத்திரைப்படம் குளோப் விருது நாமினேஷனில் ஆங்கிலம் மொழி இல்லாத படப்பிரிவிலும், நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வான நிலையில், தற்போது நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது. 


லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த கோலாகல விழாவில், ஆர்.ஆர்.ஆர் நட்சத்திரங்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆர்.ஆர்.ஆர். படம் கோல்டன் கோபல் விருதை வென்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரைத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக கோல்டன் குளோப் விருது விளங்குகிறது. இந்த விருதை இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி பெற்றுக்கொண்டார்.



Advertisement

Advertisement

Advertisement