• Apr 25 2024

உக்ரைன் அதிபர் வீட்டின் முன்பு எடுக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல்- அடடே இதுவரை தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஷ்ரேயா சரண், சமுத்திரக்கனி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி வெளியான படம் ஆர் ஆர் ஆர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் என்னும் பகுதியில் 80 ஆவது கோல்டன் குளோப் விருது விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில்  ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்த விருதை பாடலின் இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றுக்கொண்டார்.


நாட்டுக் கூத்து பாடலை ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் கால் பைரவா இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலின் லிரிக் வீடியோ கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர்.10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. முழுமையான வீடியோ பாடல் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 தேதி  வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்தப் பாடலானது உக்ரைன் நாட்டில் வைத்து படமாக்கப்பட்டது. இது குறித்து இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி கூறியிருப்பதாவது:

இந்த நாட்டு நாட்டு பாடலானது உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியின் வீட்டு முன்பு வைத்து படமாக்கப்பட்டுள்ளது என்று கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் காணொலி மூலமாக உக்ரைன் நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடங்கிய பின்பு தான் இந்தப் பாடலின் ஷூட்டிங் நடந்தது. ஆர் ஆர் ஆர் படக்குழுவினர் உக்ரைனுக்கு படப்பிடிப்பிற்கு செல்வது குறித்து டுவிட்டரில் புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர். அதன் பிறகு ஷூட்டிங் முடிந்து நாட்டிற்கு திரும்பிய பிறகு தான் உக்ரைன் போர் குறித்த தீவிரத்தை உணர்ந்து கொண்டோம் என்று இயக்குநர் நினைவு கூர்ந்தார்.


Advertisement

Advertisement

Advertisement