• Apr 18 2024

RRR பாலிவுட் படமே இல்லை.. ஹாலிவுட்டில் டென்ஷனான ராஜமெளலி.. நடந்தது என்ன..?

RRR
Aishu / 1 year ago

Advertisement

Listen News!

RRR திரைப்படம் பாலிவுட் படம் இல்லை என இயக்குநர் ராஜமெளலி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சியில் விளக்கம் அளித்துள்ள வீடியோ தற்போது  சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இந்திய சினிமா என்றாலே வெளிநாடுகளில் பாலிவுட் என்று மட்டுமே பதிந்துள்ளது. ஆர்ஆர்ஆர் படம் சமீபத்தில் கோல்டன் குளோப் விருதை நாட்டுக் கூத்து பாடலுக்காக வென்ற நிலையில், இயக்குநர் ராஜமெளலி ஹாலிவுட் ரசிகர்கள் அறிந்து கொள்ள இப்படி பேசியுள்ளார்

அத்தோடு கடந்த ஆண்டு இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. அத்தோடு , சர்வதேச விருதுகளை வெல்லும் முயற்சியில் தீவிரம் காட்டி வெற்றியும் பெற்றுள்ளது.

கோல்டன் குளோப், ஆஸ்கர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்திய படங்கள் நாமினேஷன் பட்டியலில் கூட இடம்பிடிக்க முடியாமல் போராடி வரும் சூழலில் கோல்டன் குளோப் விருதுகளில் இரு பிரிவுகளின் கீழ் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாமினேட் ஆனது. சிறந்த அயல்நாட்டு திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் (நாட்டுக் கூத்து) என இரு பிரிவுகளில் நாமினேட் ஆன நிலையில், சிறந்த பாடலுக்கான விருதை தட்டிச் சென்றது. இசையமைப்பாளர் கீரவாணி அந்த விருதை பெற்றுக் கொண்டார்.

மேலும் இந்திய திரைப்படங்கள் என்றாலே வெளிநாட்டவர்க்கு பாலிவுட் படங்கள் மட்டும் தான் என்கிற மாயையை இந்தி சினிமாக்கள் பல காலமாக உருவாக்கி வைத்துள்ளன. ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து கடந்த ஆண்டு முழுவதும் பாராட்டிய பல ஹாலிவுட் பிரபலங்களும் அதை பாலிவுட் படம் என்றே குறிப்பிட்டு வந்தனர்.

இவ்வாறுஇருக்கையில் , சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் ஆர்ஆர்ஆர் படம் பாலிவுட் படம் என்றே குறிப்பிடப்பட்ட நிலையில், சற்றே கடுப்பான இயக்குநர் ராஜமெளலி அது குறித்து தெளிவுப்படுத்தி உள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

RRR திரைப்படம் பாலிவுட் திரைப்படம் அல்ல, அது ஒரு டோலிவுட் திரைப்படம் என்றும் நான் எங்கிருந்து வந்தேனோ அந்த தென்னிந்தியாவில் உருவான திரைப்படம் என்கிற அதிரடி விளக்கத்தை ஹாலிவுட் பிரபலங்கள் மத்தியில் ஆணித்தரமாக கூறி உள்ளார் இயக்குநர் ராஜமெளலி.அத்தோடு  அவரது பேச்சை கேட்ட டோலிவுட் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

RRR படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன் என பாலிவுட் நடிகர்களை வைத்து படமெடுத்து ஹிட் கொடுத்து விட்டு அதை இந்தி மார்க்கெட்டிலும் பான் இந்தியா படம் என விற்று விட்டு தற்போது ஆர்ஆர்ஆர் படம் பாலிவுட் படம் இல்லை டோலிவுட் படம் என எப்படி சொல்லலாம் என ராஜமெளலி மீது சில பாலிவுட் ரசிகர்கள் கோபத்தில் அவரது பேச்சை ட்ரோல் செய்து வருகின்றனர்.

அத்தோடு கோல்டன் குளோப் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவை பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான் உள்ளிட்ட பலர் பாராட்டி உள்ளனர். அந்த விருதை கொடுங்க தொட்டுப் பார்த்து விட்டு தருகிறேன் என ஷாருக்கான் பதிவிட, இது இந்திய சினிமாவுக்கான விருது அனைவருக்கும் சொந்தம் என நடிகர் ராம்சரண் பதில் ட்வீட் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement