ரசிகர்களின் எதிர்பார்ப்பை துாண்டிவிடும் ரோஜா சீரியல்- அடுத்ததாக என்ன நடக்கப்போகின்றதோ?

194

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான சன்டிவியில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ரோஜா. இந்த சீரியல் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படுகின்றது. அத்தோடு நீண்ட நாள்களாக டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்திலிருந்த ரோஜா, சமீப காலமாக பின்னடைவு பெற்றிருக்கிறது என்பதும் தெரிந்ததே.

மேலும் ஒரேயொரு சஸ்பென்ஸ்தான் சிறு வயதில் பிரிந்துபோன குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் சேரும் கதைதான் என்றாலும், அதில் ஏராளமான ட்விஸ்டுகளை கொடுத்து மக்களைக் கவர்ந்து வருகின்றார் இயக்குனர். அத்தோடு பிரிந்துபோன குடும்பத்தின் உண்மையான மகள் யார், விபத்தில் அனைத்தையும் மறந்த தாய்க்குத் தான் யார் என்கிற நினைவு திரும்புமா, தாயும் மகளும் இணைவார்களா என்கிற பல கேள்விகளை எழுப்பும் வகையில் இச் சீரியலை அமைத்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் சமீபத்தில் ரோஜா தன் தாயை சந்திப்பதுபோன்ற ப்ரோமோ வெளியாகியது. இது டாப் ட்ரெண்டிங்கிலும் வந்தது. இதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த ரோஜா தொடரின் பிரத்தியேக ப்ரோமோ ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றனர். அதில், அன்பே வா, சித்தி 2, தாலாட்டு உள்ளிட்ட தொடர்களின் முக்கிய கதாபாத்திரங்கள், மறதியில் இருக்கும் தாய்க்கு நினைவு திரும்புமா? ரோஜா தன் தாயோடு இணைவாரா? அல்லது மகளாக நடிக்க வந்த அணுவை நினைவு திரும்பாத தாய் தன் மகளாக ஏற்றுக்கொள்வார்? என்று விவாதிப்பது போன்று உருவாக்கப்பட்டிருக்கின்றன

இதனால் ரோஜா தொடரின் இந்த பிரத்தியேக ப்ரோமோவிற்கு மக்களிடமிருந்து ஏராளமான கமெண்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில், ‘இது மிகவும் அருமையான ப்ரோமோ. முழு தொடருக்காகக் காத்திருக்கிறோம்’, ‘செண்பகம், ரோஜாவைதான் தன்னுடைய மகள் என்று சொல்லவேண்டும்’, ‘உண்மை தெரிந்துவிட்டால் சீரியல் முடிந்துவிடும். அதனால் நிச்சயம் உண்மையை சொல்ல மாட்டார்கள்’ போன்ற கமெண்டுகளை ரசிகர்கள் அள்ளிக்குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.