• Dec 10 2022

ரோஜா சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு..குவியும் வாழ்த்துக்கள்..!

Listen News!
Aishu / 3 weeks ago
image
Listen News!

விஜேயாக தனது பணியை ஆரம்பித்து மக்களிடையே பிரபலம் ஆனவர் விஜே அக்‌ஷயா.

இவர் சன்டிவியில் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா ஷோவைத் தொகுத்து வழங்கி வந்தார்.அதன் பிறகு சீரியல்களில் கெமிட்டாகி நடித்து வந்தார்.

அதுவும் இவர் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் வில்லி கதாப்பாத்திரத்தில் சூப்பராக நடித்து வருகின்றார்.


இவ்வாறுஇருக்கையில் ரசிகர்களுக்கு தனது இரண்டாவது திருமண நாளில் கர்ப்பமானதை அறிவித்து இருந்தார்.


இந்நிலையில் இவருக்கு தற்போது பெண்குழந்தை பிறந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.அதற்கு பலரும் தமது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.