• Jun 04 2023

குழந்தை இருக்கும் விடயத்தை மறைக்க திட்டமிடும் ரோகினி...வசமாக சிக்கப்போகும் விஜயா..வெளியான வீடியோ..!

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் இந்த பூக்கட்டுறவளுக்கு முன்னாடி  என் பையன் மனோஜிற்கு பெரிய இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று விஜயா கூறுகின்றார்.

இந்த நேரம் ரோகினி அவர்களின் வீட்டிற்கு வர அவரை அழைத்து வீட்டிற்குள் உட்கார வைத்து விட்டு என் பையனை கட்டிக்கிறியா எனக் கேட்கின்றார்.அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து விட்டு வீட்டிற்கு வந்து அவரின் நண்பியுடன் சுற்றி விளையாடி விட்டு நான் சொன்னா செய்வேன் என வில்லி பேசுவது போல பேசுகின்றார்.

இதன் பின் தன் தாயின் வீட்டிற்கு வருகின்றார்.பின் தன் தாயிடம் ான் கல்யாணம் பண்ணிக்கப் பேறேன் என்ற விஷயத்தை சொல்கின்றார்.

அதற்கு தாய் நீ ஏற்கனவே கல்யாணம் ஆகி உனக்கு குழந்தை இருக்கின்ற விஷயத்தை சொல்லலையா எனக் கேட்க இல்லை நான் சொல்ல மாட்டேன் என ரோகினி சொல்கின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement

Advertisement