• Apr 23 2024

வெளியானது சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் விவரம்... இணையத்தில் வைரல்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள சூரியா 42 திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் அப்டேட் சமீப காலங்களாக வெளியாகி கொண்டே இருக்கிறது. 


இந்த நிலையில் படத்தின் டைட்டில் என்னவென்று படக்குழு அறிவிக்காமல் இருந்தது இந்த நிலையில் தற்போது சூரியா 42 படத்தின் டைட்டில் அப்டேட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா இவர் கடைசியாக விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 


இவருடைய அந்த மிரட்டலான கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார்.


வணங்கான்  திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலாவிற்கும் நடிகர் சூர்யாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இந்த திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகிக் கொண்டார். அதன் பிறகு வணங்கான் படத்தின் இயக்குனர் பாலா அவர்கள் சூர்யா விலகியதற்கு இதுதான் காரணம் என ஒரு அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.


இவர் சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் முடிந்ததும் அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா அவர்கள் நடித்து வரும் சூரியா 42 வது படத்தின் டைட்டில் அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.


3d தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திரிஷா பதானி நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தின் டைட்டில் அப்டேட் ஒன்று மிக தீவிரமாக வைரலாகி வருகிறது.


அந்த வகையில் இந்த படத்தின் டைட்டில் மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என தற்போது ஒரு தகவல் இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரபூர்வமாக படக்குழு அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்க படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement