• Apr 19 2024

RCB கேப்டன் தோணி... கோச் மணிரத்னம்... என்ன ஒரு காமினேஷன்..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சினிமா நட்சத்திரங்களுக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றதோ அந்தளவிற்கு கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். பல சினிமா நடிகர், நடிகைகைகள் கூட இவர்களுக்கு fans ஆக இருக்கின்றனர்.

அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்தவர் தான் தோணி. இவர் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதில் சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து வருகின்றார். 


இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் தோணி ஆர் சி பி அணிக்கு கேப்டன் ஆக இருந்தால் எப்படியிருக்கும். அதேபோன்று திரைப்பட இயக்குநர் மணிரத்னம் அந்த டீமிற்கி கிரிக்கெட் கோச்-ஆக இருந்தால் எப்படியிருக்கும்?, இப்படியான ஒரு கதைக்களத்தில் தற்போது ஒரு படம் உருவாகி வருகின்றது.


அந்தவகையில் திட்டம் இரண்டு படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ், கௌரி கிஷான் நடிக்கும் டைம் ட்ராவலர் படத்தில் தான் இப்படியெல்லாம் வித்தியாசமான உலகம் வரப்போகிறதாக கூறப்படுகின்றது. இதனால் இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement