• Apr 24 2024

சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகிய இராவணக் கோட்டம் திரைப்படத்தின் முதல் விமர்சனம்

stella / 11 months ago

Advertisement

Listen News!

மதயானைக் கூட்டம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். முதல் படத்திலேயே திரையுலகில் அதிகம் கவனம் ஈர்த்த விக்ரம் சுகுமாரன், தற்போது இராவண கோட்டம் படத்தை இயக்கியுள்ளார். கண்ணன் ரவி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சாந்தனு பாக்யராஜ், கயல் ஆனந்தி, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

1957ம் ஆண்டு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் கருவேலம் காட்டு அரசியலை பேசும் படமாக உருவாக்கியுள்ளது. 


ஆனால், இந்தப் படம் குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த மக்களை சாடியுள்ளதோடு, அவர்களை காயப்படுத்துவது போல் எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. 

மேலும், இராவண கோட்டம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.இதனால் படக்குழு இராவணக் கோட்டம் படத்தில் அப்படி எதுவும் தவறாக எடுக்கவில்லை என விளக்கம் கொடுத்திருந்தது.


இந்த நிலையில் இப்படம் இன்று வெளியாகிவிட்டது.படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்து வருகிறார்கள்.தற்போது டுவிட்டரில் ரசிகர்கள் என்ன விமர்சனம் கொடுத்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.



Advertisement

Advertisement

Advertisement