• Feb 02 2023

தென்னிந்திய சினிமாவை அவமானப்படுத்திப் பேசிய ராஷ்மிகா... கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

Listen News!
Prema / 1 month ago
image

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்திலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து இருக்கின்றார்.


இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது 'வாரிசு' திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது. இதில் விஜய் க்கு ஜோடியாக நடித்துள்ளார். அத்தோடு தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.

மேலும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் மஞ்சு' படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


அந்தவகையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா, பாலிவுட் மற்றும் தென்னிந்திய பாடல்கள் குறித்து பலவாறாக பேசினார்.

இதில் குறிப்பாக ' தென்னிந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்களும், குத்து பாடல்களும் மட்டுமே பிரபலமாக இருக்கிறது. ஆனால், பாலிவுட்டில் தான் நல்ல ரொமான்டிக் பாடல்கள் உள்ளது என கூறியுள்ளார்.


ராஷ்மிகா இப்படி பேசியுள்ளது தென்னிந்திய சினிமா ரசிகர்களை பயங்கர கடுப்பாக்கியுள்ளது. தென்னிந்திய சினிமாவை அவமானப்படுத்தும் வகையில் ராஷ்மிகா எப்படி பேசலாம் என்று அவரை ரசிகர்கள் பலரும் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement