விஜய்தேவர்கொண்டாவைச் சந்திக்க அமெரிக்காவுக்கு கிளம்பிய ராஷ்மிகா மந்தனா- எல்லாம் காதலால் தானாம்

371

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஸ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.அத்தோடு இவர் சமீபத்தில் கார்த்தில் நடிப்பில் வெளியான சுல்தான் என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமீபத்தில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் கதாநாயகிகள் பட்டியலில் முதல் இடத்தினையும் பிடித்துள்ளார்.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராஷ்மிகா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ராஷ்மிகா தற்போது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பரபரப்பாகி உள்ளது. அதை வைத்து அவர் நடிகர் விஜய்தேவர் கொண்டாவுடன் காதலில் விழுந்துள்ளதாக தெலுங்கு பட உலகினர் கிசுகிசுக்கின்றனர்.

அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது‘‘நான் எங்கு செல்கிறேன் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியதோடு உங்களை விட்டு தூரமாக செல்கிறேன். ஆனால் விரைவில் திரும்பி வந்து விடுவேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதனால் அமெரிக்காவில் லைகர் தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள நடிகர் விஜய்தேவர்கொண்டாவை சந்திக்கவே ராஷ்மிகா செல்கிறார் என்று ரசிகர்கள் பதில் அளித்துள்ளனர். இருவரும் ரகசியமாக காதலிப்பதாகவும் விரைவில் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர் என்றும் தெலுங்கு பட உலகினர் பேசி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.