• Sep 22 2023

தனது செல்ல நாய்க்குட்டியின் பர்த்டே கொண்டாடிய ரம்யா பாண்டியன் - வைரல் போட்டோஸ்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர் பட்டாளம் உருவானது.


இவர் நடிப்பில் வெளியான 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ரம்யா பாண்டியனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இவர் அவ்வவ்ப் போது தனது புகைப்படங்கள்,வீடியோக்களை பகிர்வது வழக்கம்.அந்தவகையில் தற்போது தனது நாய்குட்டியின் பிறந்த நாளை சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement