• Mar 29 2024

காதலி சீதா மகாலக்ஷ்மியைப் பார்க்க அமெரிக்காவிற்குச் சென்ற ராம்- என்ன ஒரு ஜோடிப் பொருத்தம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் சீதா ராமம். இப்படத்தில் இவர்களுடைய ஜோடிப் பொருத்தம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் இப்படத்தை தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா முக்கியமான  வேடத்தில் நடித்தார்.


1960களில் போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த 'சீதா ராமம்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு,  தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.


இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் & மிருணாள் தாகூர் இருவரும் அமெரிக்காவில் சந்தித்துள்ள புகைப்படத்தை 'Reunited' என தலைப்பிட்டு நடிகை மிருணாள் தாகூர் தனது முகநூல் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.சீதா ராமம் திரைப்படத்தில் துல்கர் சல்மான் ராம் எனும் ராணுவ வீரனாகவும், மிருணாள் தாகூர் சீதா மகாலட்சுமி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement