• Apr 20 2024

இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறப்போவது ராம் கிடையாதாம்- கன்ஃபார்மாக வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் கொஞ்சம் கூட பரபரப்புக்கு குறையே இல்லாமல் போரடிக்காமல் சென்று கொண்டிருக்கிறது.21 போட்டியாளர்கள் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சியிலிருந்து இதுவரை சாந்தி மாஸ்டர் ,ஜி.பி முத்து ,அசல் ,ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகமாகக் காணப்படுகின்றது.அதன்படி இந்த வாரம் அசீம், மகேஸ்வரி, தனலட்சுமி, ராம், ஏடிகே, விக்ரமன், ஆயிஷா உள்ளிட்ட 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் வழமை போல அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் முதலாவதாக சேஃவ் ஆகிவிடுவார்கள் என்பது யாவரும் அறிந்ததே. அவரைத் தொடர்ந்து ஆயிஷா தனலக்ஷ்மி ஏடிகே ஆகியோர் சேஃவ் ஆகிவிடுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.


இது தவிர இந்த வாரம் கண்டிப்பாக ராம் தான் வெளியேறுவார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் இதுவரை எடுக்கப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் கடைசி இடத்தில் விஜே மகேஸ்வரி இருந்து வரும் நிலையில்,மகேஷ்வரி தான் இந்தவாரம் வெளியேறுவார் என்று கன்போஃர்மான தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement