• Apr 26 2024

காதல் மன்னனாக சுற்றி வந்த ராபர்ட் மாஸ்டரை கதறி அழ வைத்த ரக்ஷிதா.! என்ன நடந்தது.?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பஜக்பாஸ் 6. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் 40ம் நாளில் நடந்தது என்ன என்று பார்ப்போம்.

கதிரவன் ராஜ குடும்பத்தின் விஸ்வாசத்திற்காக தனது களவிளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார். இதனை ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாத ஹவுஸ்மேட்ஸ் அவரை விலங்கு போட்டு கூட வைக்கின்றனர். இருப்பினும் இவர் சாதுரியமாக களவுகளைத் தொடர்நது செய்து வருகின்றார்.


இது ஒரு புறம் இருக்க படைத்தளபதியாக அசீமும், பாதுகாவலர்களின் தலைவனாக ஏடிகேவும் இருந்து வருகின்றனர்.பாதுகாவலனாக இருக்கு ஏடிகே அரண்மனையில் உள்ள பொருட்களை திருடியவர்களை கை, கால்களை கட்டிப்போட்டு தண்டனை கொடுத்துள்ளார். இதைப்பார்த்த அசீம், உனக்கெல்லாம் மனிதாபிமானமே கிடையாதா என்று கேட்க, இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வெடித்துள்ளது. 

திரும்ப திரும்ப வந்து அசீம் பேசி வம்பிழுத்ததால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஏடிகே, அவரை கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு இந்த டாஸ்க்கை விளையாடப்போவதில்லை என்று கூறியிருந்தார்.தொடர்ந்து அரண்மையில் அடிக்கடி களவு போவதால் ராஜாவை காட்டுக்கு அனுப்பி தவம் புரிய வைக்க வேண்டும் என விக்ரமன் கூற ராஜாவும் தனது ஆடை அணி கலன்களை கழட்டி வைத்து விட்டு காட்டுக்குச் செல்கின்றார் இத்துடன் இந்த டாஸ்க் முடிவடைந்தது.


இதனை அடுத்து ராஜவம்சமும், அருங்காட்சியகமும் டாஸ்கில் யாருக்கும் தெரியாத சில உண்மைகள் உள்ளதாக தெரிவித்து , ராணி மற்றும் படை தளபதிக்கு கொடுத்த டாஸ்க் குறித்து மற்ற போட்டியாளர்களுக்கு தெரிவிக்கிறார் பிக்பாஸ். இதனைப் பார்த்த போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை, கண் கலங்கியபடி, ராபர்ட் மாஸ்டர் வெளியே வர... ரக்ஷிதா மிகவும் கடுப்பாக அமர்ந்திருக்கும் காட்சிகளும் காட்டப்படுகிறது. ராபர்ட் மாஸ்டரை ADK எதோ சொல்லி தேற்றுகிறார்.அதாவது ராணியாக இருந்து கொண்டு ரச்சிதா இப்படி செய்து விட்டாரே தனக்கு இந்த டாஸ்க் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டுட்டாரே என கண்கலங்கி அழுகின்றார்.இதனால் அனைத்து ஹவுஸ்மேட்டும் சமாதானம் செய்கின்றனர். அதே போல ரச்சிதாவும் அழ மைனா சமாதானப்படுத்துவதையும் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement