• Mar 27 2023

குடும்பத்தை வீட்டை விட்டுத் துரத்திய ரஜினி பட வில்லன்.. நடுரோட்டில் நின்று கதறி அழும் மனைவி மற்றும் மகள்.. கண்ணீரோடு வெளிந்த வீடியோ..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருபவர் தான் நடிகர்  நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த பேட்ட திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் இந்தியில் பிரபல நடிகராக இருக்கிறார். 


இவ்வாறாக பிரபல நடிகராக இருந்து வந்தாலும் இவரது சொந்த வாழ்க்கை சர்ச்சை நிறைந்ததாக மாறி உள்ளது. அதாவது நவாசுதீன் சித்திக் மீது அவரது மனைவி அலியா தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறார். 


அந்தவகையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நாள் முதல் நவாசுதீன் தன்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வருவதாக சமீபத்தில் புகார் ஒன்றினை அளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது வீடியோ வெளியிட்டு மற்றுமோர் புகாரினை அளித்துள்ளார். 


அதாவது தன்னையும், தனது குழந்தைகளையும் காவலாளிகளை வைத்து வீட்டில் இருந்து பலவந்தமாக நவாசுதீன் சித்திக் வெளியேற்றி விட்டதாக அலியா அப்புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் "என்னிடம் வெறும் 81 ரூபாய் மட்டுமே உள்ளது. இரண்டு குழந்தைகளுடன் எங்கு செல்வது என்று புரியவில்லை. நவாசுதீன் இப்படி செய்வார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 

பெற்ற தந்தையே இப்படி செய்ததை எனது மகளால் ஜீரணிக்க முடியவில்லை. என்னையும், குழந்தைகளையும் நடுத்தெருவில் விட்ட நவாசுதீன் சித்திக்கை சும்மா விடமாட்டேன்'' என்று கண்ணீருடன் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது அந்த வீடியோவில் அவரின் மகள் ரோட்டில் நின்று வீட்டை பார்த்தபடி அழும் காட்சியும் இடம்பெற்று உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement