• Sep 27 2023

ரஜினியின் 'ஜெயிலர்' படத்திற்கு வந்த சிக்கல்... ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், விமர்சனம் ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை தற்போது  இயக்கி முடித்துள்ளார் .


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், 'ஜெயிலர்' படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா என பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

அந்தவகையில் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகள் இருக்கும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் முதல் காட்சி 9 மணிக்குத்தான் தொடங்கும் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.


இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் ஸ்ரீதர் கூறுகையில் இதுவரை அரசிடமிருந்து எந்த வழிகாட்டுதலும் எங்களுக்கு வரவில்லை. அரசு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம் எனத் தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement