மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை மிர்னா மேனன். அந்தவகையில் இவர் மலையாளத்தில் வெளியான பிக் பிரதர் திரை படத்தின் மூலம் அறிமுகனவர். இதனையடுத்து ஆனந்தம் என்ற தமிழ் வெப் தொடர் நடித்து இருக்கிறார்.
அத்தோடு தமிழில் 'பட்டதாரி' என்ற படத்திலும் நடித்திருக்கின்றார். அதாவது கடந்த 2016ல் வெளியான 'பட்டதாரி' என்ற படத்தில் கதாநாயகன் நாயகியாக இணைந்து நடித்தவர்கள் தான் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன்.
இவர்களில் தற்போது சரவணன் விஜய் விஷால் என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார். அதேபோல அதிதி மேனன் மிர்னா என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மிர்னா மேனன், நடிகர் அபி சரவணனை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துள்ளதாக ஏற்கெனவே ஒரு தகவல் வைரலாகி இருந்தது. ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் வெளியான ரஜினியின் 'ஜெயிலர்' படத்திலும் ரஜினியின் மருமகளாக மிர்னா மேனன் தான் நடித்திருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் ரஜினியின் மருமகள் ரகசியத் திருமணம் செய்து விட்டார் எனக் கூறி நடிகர் அபி சரவணனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
Listen News!