OTT-யில் வெளியான ரஜனியின் படம்-கடுப்பில் ரசிகர்கள்..!

1841

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூல் சாதனையும் புரிந்துள்ளது. அந்த வகையில் இவருக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளம் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயமே

அந்த வகையில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா , சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அண்ணாத்த திரைப்படம் இந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக செம மாஸாக வெளியாகி இருந்த நிலையில் ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள்.முதல் நாளிலேயே உலகம் முழுவதும் படம் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இரண்டு நாள் முடிவில் படம் ரூ. 100 கோடி வசூலிக்க ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

எனினும் 5வது நாளில் தமிழகத்தில் மழை நீடிக்க அப்படியே வசூல் குறைந்தது. மீண்டும் கடந்த சனி, ஞாயிறு கூட்டம் அலை மோதியது.

இதனிடையே அண்ணாத்த திரைப்படம் வெளியாகி 21 நாட்களே ஆகியுள்ள நிலையில் தற்போது அப்படம் Netflix மற்றும் Sun NXT-யில் வெளியாகியுள்ளது.

மேலும் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும்போதே OTT தளத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகியுள்ளதால், ரஜினியின் ரசிகர்கள் செம கடுப்பாகியுள்ளனர்.