• Jun 03 2023

சினிமாவை விட்டு விலகும் ரஜினிகாந்த்... இதுதான் அவரின் கடைசிப் படம்... உறுதி செய்த இயக்குநர்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

பல ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவர் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் எப்போதுமே காத்திருப்பது வழமை. தற்போது இவரின் நடிப்பில் 'ஜெயிலர்' படம் தயாராகி வருகின்றது. அந்தவகையில் விஜய்யின் லியோ படத்தினை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக ஏற்கெனவே ஒரு தகவல் வெளியானது. 


அதாவது லோகேஷ் கனகராஜை அழைத்து ரஜினிகாந்த், தனக்கு ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்ய சொன்னதாகவும், அதுவே அவரது கடைசி படமாக இருக்கும் என்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தன. இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இதனை உறுதி செய்துள்ளார்.


அந்தவகையில் அப்பேட்டியில் மிஷ்கின் அவர்கள் லோகேஷ் பற்றிப் பேசுகையில் "அவன் இந்திய அளவில் பெரிய லெவலில் வளர்ந்து வந்துகொண்டிருக்கிறான். அடுத்ததாக ரஜினி சாரை வச்சு படம் பண்ணப்போறான். அது மிகவும் பெருமைப்படக்கூடிய ஒரு விஷயம் தான். அது ரஜினியோட கடைசி படம்னு எல்லாரும் சொல்றாங்க" எனவும் தெரிவித்திருந்தார்.


எனவே இதன் வாயிலாக ரஜினியின் 171-ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு உறுதியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement