• Apr 01 2023

போதைப் பழக்கத்திற்கு எதிராக ரஜினி செய்த விஷயம்- குவியும் பாராட்டுக்கள்

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரிடையே போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் போதை பழக்கமானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 70 சதவீதம் போதைப் பழக்கங்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் 10 கோடி பேர் இதற்கு அடிமையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


 இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கும் முக்கிய நபர்களைச் சந்தித்து கையெழுத்து பெற்று வருகிறார்கள். இன்று ரஜினிகாந்த் அந்த கையெழுத்து இயக்கத்தில் தன் கையெழுத்தைப் பதிவு செய்தார்.


மேலும் ரஜினி தற்பொழுது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை நடிகை தமன்னா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் நேற்றைய தினம் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement