• May 29 2023

எனக்கு ரூ.5 மட்டுமே போதும் என 10 லட்சத்தை பிரபல இயக்குநருக்கு வழங்கிய ரஜினிகாந்த்- அட இப்படி ஒரு காரணமா.?

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நிறைய திரைப்படங்கள் வெளியாகி ஹிட் கொடுத்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் பார்த்தால் நடிகர் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல் இவர் நடித்த கதாபாத்திரங்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறலாம்.

அதிலும் குறிப்பாக இவரது பரட்டை என்ற கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.இந்த கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினியை நடிக்க வைத்த பாரதிராஜா அவர்கள் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினியை வைத்து இயக்கிய திரைப்படம் தான் கொடி பறக்குது.

இந்த திரைப்படம் முதல் முதலில் இயக்க வேறு ஒரு இயக்குநர் தான் இருந்தாராம் ஆனால் நான் இயக்குநர் பாரதிராஜா இயக்கினால் தான் இந்த திரைப்படத்தில் நடிப்பேன் என நடிகர் ரஜினி கூறியதால் இந்த திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா அவர்களே இயக்க ஒத்துக்கொண்டாராம்.


மேலும் ரஜினியிடம் இயக்குநர் பாரதிராஜா நீ கேட்கும் ரூ.30 லட்சம் என்னால் கொடுக்க முடியுமா என்பது தெரியவில்லை என கூறினாராம். அப்பொழுது ரஜினி பாரதிராஜாவின் சட்டை பையில் இருந்து ரூ.5 மட்டுமே எடுத்துக் கொண்டு இதுவே போதும் மீதி பணத்தை படம் முடிந்த பிறகு கொடுங்கள் என்று சொல்லி அதே போல் படம் முடிந்த பிறகு இயக்குநர் பாரதிராஜா அவர்கள் ரூ.30 லட்சத்துடன் ரஜினியிடம் சென்றுள்ளார்.

மேலும் ரஜினி இருபது லட்சம் மட்டுமே எடுத்துக் கொண்டு மீதி ரூ.10 லட்சத்தை பாரதிராஜாவிடம் திருப்பி கொடுத்து விட்டாராம். மேலும் இந்த தகவலை பாரதிராஜாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளதாக இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement