• Apr 01 2023

ஜோசியத்தை சாக்கு கூறி வளரவிடாமல் தடுத்த ரஜினிகாந்த்..கடைசியில் தனுஷ் செய்த செயல்..!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை 2006 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  இருவரும் விவாகரத்து பெற்றனர். இது ரசிகர்களை  பெரும் அதிர்ச்சி அடையவைத்தது.


எனினும் சமீபத்தில் நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் 150 கோடிக்கும் மதிப்பிலான பிரமாண்ட வீட்டை கட்டி குடி புகுந்துள்ளார்.

பிரமாண்ட வீட்டை கட்ட ரஜினிகாந்த் காரணம் என்றும் சொல்லப்படுகின்றது. அதாவது தனுஷ் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதற்கு முன்பு ரஜினிகாந்த் தனுஷிடம் போயஸ் கார்டனில் வீடு கட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார்.


ரஜினிகாந்தின் பேச்சை மீறி தான் தனுஷ் இடத்தை வாங்கினாராம். அப்போது ரஜினிகாந்தின் உறவினர்கள் சிலர் தனுஷ் குடும்பத்தினரை தாக்கி பேசியுள்ளனர்.

இதனால் தான் தனுஷ் பல படங்களில் நடித்து சொந்த பணத்தில் பிரமாண்ட வீட்டை கட்டியதாக பிரபல ஆர்.ஜே ஷா தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement