• Apr 19 2024

ஸ்டைலா..கெத்தா... ஏ.ஆர்.ரகுமான் இயக்கிய படத்தை கண்டுகளித்த ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அ. இர. ரகுமான் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மேலும் இவர்  மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.


அதுமட்டுமல்லாமல் இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். 


இவர் ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். 


மேலும் ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். 

இந்நிலையில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் லே மஸ்க் (Le Musk). வெறும் 36 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இப்படத்தை அண்மையில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டு பாராட்டுக்களை பெற்றார். 


இந்த படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், இப்படத்தை விர்சுவல் ரியாலிட்டி முறையில் அவர் உருவாக்கி உள்ளார். இந்நிலையில், லே மஸ்க் திரைப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு போட்டுக் காட்டி உள்ளார் ரகுமான். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement