• Apr 20 2024

சன் டிவி சீரியலைத் தொடர்ந்து பார்க்கும் ரஜினி... அதுவும் இந்த சீரியலயா...? நம்பவே முடியல..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். அந்தவகையில் தற்போது 'ஜெயிலர்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தினுடைய சூட்டிங் நிகழ்வுகள் யாவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரபல சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வனின் நண்பர் ஒருவர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார்.


அந்த சமயத்தில் அவரிடம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' என்ற சீரியல் குறித்து பேசியுள்ளாராம் ரஜினிகாந்த். அது அவருக்கு மிகவும் பிடித்த சீரியல் என்றும், தனது வீட்டில் தொடர்ந்து அந்த சீரியலை தான் பார்த்து வருவதாகவும் ரஜினிகாந்த் மிகிழ்ச்சியுடன் கூறியுள்ளாராம்.


இந்த சந்தோசமான விஷயத்தை எதிர்நீச்சல் சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement