• Apr 20 2024

ரஜினி சார் தான் என்னை அதிகம் influence செய்கிறார் - வெளிப்படையாகப் பேசிய கேஜிஎப் யாஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகிய சூப்பர் ஹிட் திரைப்படம் தான் கேஜிஎப். இரண்டு பாகங்களாக வெளியான இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது .

பான் இந்திய திரைப்படமாக வெளியாகிய இப்படத்தின் பின்னர் அனைத்து மொழிகளும் திரும்பிப் பார்க்கும் ஒரு நடிகர் ஆகிவிட்டார் யாஷ். அதனால் அவரது அடுத்தடுத்த படங்கள் மீதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.


கேஜிஎப் படத்தில் யாஷின் ஸ்டைல் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் யாஷ் அவரது ஸ்டைல் இன்ஸ்பிரேஷன் யார் என்கிற விவரத்தை கூறி இருக்கிறார்.

உங்க ரோல் மாடல் யார் என்கிற கேள்விக்கு பதில் சொன்ன யாஷ், "எனக்கு பல ரோல் மாடல்கள் இருக்கிறார்கள். ஷங்கர் நாக், அம்பரீஷ், Dr ராஜ்குமார், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், கிளின்ட் ஈஸ்ட்வுட் படங்கள்.. என இன்னும் பல ஸ்டார்கள் இருக்கிறார்கள்" என ஒரு பெரிய லிஸ்ட் கூறினார்.


மேலும் ரஜினி சார் தான் என்னை அதிகம் influence செய்கிறார் எனவும் அவர் கூறி இருக்கிறார். இவரின் இந்தகத கருத்தை கேட்டரஜினி ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement