• Apr 19 2024

கமலை விட ரஜினி அந்த விஷயத்தில் ரொம்ப புத்திசாலி- நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த பிரபலம்

stella / 11 months ago

Advertisement

Listen News!


இயக்குநர் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் நடிகர்கள் ரஜினியும், கமல் ஹாசனும். திறமையின் துணையால் வளர்ந்த அவர்கள் இருவரும் இப்போது இந்திய சினிமாவின் அடையாளமாக திகழ்கின்றனர். அடையாளம் மட்டுமின்றி வளர்ந்துவரும் நடிகர்களுக்கு இரண்டு பேருமே இன்ஸ்பிரேஷனாக இருந்துவருகின்றனர்.

ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்தனர். ஒருகட்டத்தில் ரஜினியை அழைத்த கமல் ஹாசன் நாம் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால் இருவரது கரியரும் முன்னேறாது என்று கூறி தனியாக நடிக்குமாறு அறிவுறுத்தினார். கமல் ஹாசன் மீது எப்போதும் தீராத நட்பு கொண்ட ரஜினிகாந்தும் அதை ஆமோதித்து தனியாக நடிக்க ஆரம்பித்தார்,


ரஜினிகாந்த் ஒருபக்கம் பெரும்பாலும் கமர்ஷியல் படங்களில் நடிக்க, கமல் ஹாசன் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து பல புதுமைகளை புகுத்தினார். இதன் காரணமாக கமல் ஹாசன் உலக நாயகன் என அழைக்கப்படுகிறார். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசம் நிச்சயம் இருந்துவிடும் என்ற விதியும் இன்று அகலாமல் இருக்கிறது. ரஜினியேகூட கமல் ஹாசனை கலையுலக அண்ணா என அழைத்த சம்பவம் அரங்கேறியிருப்பது அனைவரும் அறிந்தது.

இந்நிலையில் ரஜினி, கமல் ஆகிய இருவர் குறித்தும் மதன் பாப் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், "ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவருமே பேட்டிகளில் நிறைய பேசுவதை பார்த்திருப்போம். உண்மையில் ரஜினிகாந்த் நிகழ்வுகளில் பேசுவதற்கு முதல் நாளே தயாராகிவிடுவார். என்னவெல்லாம் பேச வேண்டும் என்பதை தீர்மானித்து மனதில் அவற்றை ஏற்றிக்கொண்டு பேசுவார்.

அதனால் ரஜினிகாந்த் பேசுவது நிதானமாக இருக்கும், ஆனால் கமல்ஹாசன் அப்படியில்லை. அந்த இடத்திலேயே என்ன பேச வேண்டும் என முடிவெடுத்து பேசுவார். இதனால் அடிக்கடி கமல்ஹாசன் பேசுவது என்னவென்று நமக்கு புரியாது. எனவே அந்த விசயத்தில் ரஜினி கொஞ்சம் புத்திசாலி" என்றார்.


Advertisement

Advertisement

Advertisement