• Apr 25 2024

தற்போது தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் விஜய்தான்; வைரலாகும் சீமானின் பேச்சு

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் யார் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை கடந்த ஆண்டிலிருந்தே ஒரு விவாத பொருளாக பேசப்பட்டது வருகிறது. சோசியல் மீடியாக்களிலும் இந்த பிரச்சனை தொடங்க ஆரம்பித்தது விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் தங்களுடைய நடிகர் தான் சூப்பர் என்று விவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பல விதமான மீம்களையும் போட்டு ஒருவரை கூறுவர் கலாய்த்தும் வந்தனர். 

இந்த நிலையில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் 10 பேர் பத்திரிகையாளரான பிஸ்மியின் இல்லத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு யூடியூபில் ரஜினிக்கந்தை விமர்சித்து போட்டுள்ள பதிவை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் ரஜினி ரசிகர்களின் இந்த செயலை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பிரபல ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் யார் சூப்பர்ஸ்டார் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான் “அப்போது ரஜினிகாந்த ஐயா இப்போது என் தம்பி விஜய் என அசால்ட்டாக பதில் சொல்லிவிட்டார். மேலும் அவர் கூறுகையில் “சூப்பர்ஸ்டார் என்பது ஒரு பட்டயம் கிடையாது. அது ஒரு பெருமை தரக்கூடிய ஒரு பட்டப்பெயர் அவ்ளவுதான்.

கடந்த காலத்தில் தியாகராஜ பாகவதர் இருந்தார்கள், அதற்கு பிறகு எம்.ஜி.ஆர் வந்தார், அதற்கு பிறகு ரஜினிகாந்த் வந்தார். இந்நிலையில் தற்போது தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார் விஜய் தான். அதோடு ஒரு தமிழர் தமிழ் நாட்டில் வளர்ந்துவருவதை மகிச்சியாக கொண்டாட வேண்டியது தானே. இதனை ரஜினிகாந்த் ஐயாவே ஒப்புக்கொள்வார். அவருடைய சில ரசிகர்கள் இந்த மாதிரியான விஷியங்களை செய்தாலும் ரஜினி ஒரு மேடையில் விஜய் அந்த இடத்திற்கு வந்துவிட்டார் என கூறியிருக்கிறார்.

ஒரு உயர்ந்த சினிமா நட்சத்திரம் என்பவர் குழந்தைகள் முதல். பெண்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், பெரியவர்கள் என அணைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கபட வேண்டும். அப்படி தொடக்கத்தில் எம் .ஜி.ஆர் இருந்தார், அதற்கு பிறகு ஐயா ரஜினிகாந்த் வந்தார், தற்போது தம்பி விஜய் இருக்கிறார் என்று கூறினார் சீமான். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இப்படி பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியால் விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement