• Sep 25 2023

தன்னுடைய குடும்பத்தை பார்க்க ஆசைப்படும் ராகினி- கம்பெனிக்காக தமிழ் செய்த காரியம்- குழப்பத்தில் நமச்சி- Thamizhum Saraswathiyum Serial

stella / 1 week ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ராகினியை சமாதானப்படுத்த அர்ஜுனின் அம்மாவும் அக்காவும் பால் கொண்டு வந்து கொடுக்கின்றனர்.அப்போது அர்ஜீனும் வந்து விட ராகினிக்கு வளைகாப்பு பண்ண வேண்டும் என்ற விஷயத்தைச் சொல்கின்றனர். அப்போது ராகினி வளைகாப்புக்கு எங்க அம்மாவும் வந்தால் நல்லது என்று சொல்ல அர்ஜுனின் அம்மா அவங்க இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று திட்டி விட்டுச் செல்கின்றார்.


மறுபுறம் கார்த்திக் கம்பனிக்கு புதுப்புது ஐடியாவைக் கொடுக்கின்றார். இதனால் தமிழும் நல்ல ப்ரீடம் கொடுத்து கொடுத்து நீ உனக்கு சரி என்று தோணுவதை செய் என்கின்றார். இதைப் பார்த்த நமச்சிஎதுக்காக கார்த்தியை இப்பிடி எல்லாவற்றையும் செய்ய விடுகின்றாய் என்று கேட்கின்றார். அதற்கு தமிழ் அவர் ஏற்கனவே தாழ்வு மனப் பான்னைல இருக்கிறான்.

அந்த கம்பெனில பெரிய போஸ்டிங்ல இருந்து தான் வந்தவன் கண்டிப்பாக இங்க தப்பு பண்ணமாட்டான் என்று சொல்ல நமச்சி சந்தோசப்படுகின்றார்.அத்தோடு கார்த்திக் கூட நீ இப்பிடி இருக்கிற மாதிரியே அம்மா கூடவும் பேசலாம் தானே என்கின்றார். அப்போது தமிழும் யோசிக்கின்றார். 


தொடர்ந்து ராகினி அர்ஜுனிடம் அம்மா உங்களுக்கு துரோகம் பண்ணினாலும் எங்க மேல பாசமாத் தான் இருந்தாங்க, ஒரு நாள் என்மேல பந்து விழ வந்தபோது தமிழ் தான் அந்த பந்தை பிடிச்சாரு அவங்களுக்கு இன்னும் என்மேல பாசம் இருக்கு அவங்க வளைகாப்புக்கு வந்து ஆசீர்வதித்தால் நல்லா இருக்கும் என்கின்றார்.


தொடர்ந்து சரஸ்வதி வீட்டுக்கு ஹவுஸ் ஓனர் வந்திருப்பதால் வசு தன்னுடைய குழந்தையை சரஸ்வதி கையில் கொடுத்த சரஸ்வதி கிட்ட இருக்கிறதால தான் அவன் நல்லா இருக்கிறான். சரஸ்வதியும் அவனுக்கு அம்மா தான் என பெருமையாகப் பேசிட்டு இருக்கின்றார். தொடர்ந்து ஹவுஸ்ஓனர் போனதும் கோதை வசுவிடம் உனக்கு குறும்பு கூடிட்டு என்று சொல்ல,வசு அவங்களுக்கா மட்டும் சொல்லல மனசில தோணிச்சு அதான் சொன்னேன் என்கின்றார்.வசுவும் சரஸ்வதியும் அப்படி ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து கோதை சந்தோசப்படுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement