• Dec 05 2022

சூர்யா குடும்பத்துடன் இணைந்து தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடிய ராதிகா சரத்குமார்- வைரலாகும் வீடியோ

Listen News!
stella / 1 month ago
image
Listen News!

தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருப்பவர் தான் ராதிகா சரத்குமார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்திருக்கும் இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியாகியிருந்த வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார்.தற்பொழுது சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸின் தாயாக நடித்து வருகின்றார். அதே போல இவருடைய கணவனான சரத்குமார் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.


மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்வோக இருக்கும் ராதிகா தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் அண்மையில் தான் உமல் எடையை குறைத்துக் கொண்ட வீடியோக்களை பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி வருவதால் ராதிகாவும் இப் பண்டிகையை சூர்யா குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.