• Apr 20 2024

பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் ராதிகா-இணையத்தில் வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியம் உள்ள வேடங்களில் நடித்து வருகின்றார்.

மேலும் இவர் தனது மகனுக்கு அண்மையில் பட்டம் அளிக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்ததோடு தனது மகிழ்ச்சியையும் பதிவிட்டு இருந்தார். அதே போல இவருக்கு ரயன் மிதுன் என்ற ஒரு மகளும் உள்ளார். இவர் பிரபல கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

ரயனுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூருக்கு சென்று வந்திருக்கும் ராதிகா தன் பேரக் குழந்தைகளான தாரக் மற்றும் ராத்யாவுக்கு ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருக்கிறார்.

அதை கொடுக்க, தாரக்கும், ராத்யாவும் சந்தோஷத்தில் சத்தம் போடுகிறார்கள். அந்த வீடியோவை தான் ரயன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, அம்மா எனக்கு வாங்கி வந்த உடையை கொடுக்கும் விதத்தை மட்டும் பாருங்கள் என்றார்.

இந்தாபுடினு மகள் கையில் உடையை திணித்துவிட்டு பேரக் குழந்தைகள் பக்கம் திரும்பிவிட்டார் ராதிகா. அந்த வீடியோவை பார்த்து தான் ரசிகர்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கண்ணு படப் போகுது ரயன், சுத்திப் போடுங்க என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ராதிகாவுக்கு தன் பேரப்பிள்ளைகள் தான் உயிர். அவர்களுடன் சேர்ந்து விளையாடும்போது குழந்தையாக மாறிவிடுவதாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement